கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பொலிவியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது அர்ஜென்டினா.
குயாபா நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-வது நிமிடத்தில்அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி உதவியுடன் பப்பு கோமஸ் கோல் அடித்தார். 33-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பையும் 41-வது நிமிடத்தில் அகுரோ அடித்த பாஸையும் மெஸ்ஸி கோலாக மாற்ற அர்ஜென்டினா 3-0 என முன்னிலை பெற்றது. 60-வது நிமிடத்தில் பொலிவியாவின் சாவேத்ரா கோல் அடித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்