UA-201587855-1 Tamil369news 'தர்மயுத்தம்' வெளியான நாள்: கமலின் அண்ணன் இயக்கிய படத்தில் நாயகனாக ரஜினி! 

'தர்மயுத்தம்' வெளியான நாள்: கமலின் அண்ணன் இயக்கிய படத்தில் நாயகனாக ரஜினி! 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆரம்பக் கால வெற்றிப் படங்களில் ஒன்றான 'தர்மயுத்தம்' வெளியாகி இன்றோடு (ஜூன் 29) 42 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

1978இல் வெளியான 'பைரவி' ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த முதல் படம். சிறிய கதாபாத்திரம். வில்லன், குணச்சித்திர நடிகர், இரண்டாவது கதாநாயகன் என்று படிப்படியாக வளர்ந்து முதன்மைக் கதாநாயகன் என்னும் அந்தஸ்தை மூன்றே வருடங்களில் அடைந்திருந்தார் ரஜினி. அந்த ஆண்டில் காவிய அந்தஸ்தைப் பெற்ற மகேந்திரனின் 'முள்ளும் மலரும்', கே.பாலசந்தரின் 'தப்புத் தாளங்கள்' உள்ளிட்ட திரைப்படங்களில் முதன்மை நாயகனாக தன்னுடைய அபாரமான நடிப்புத் திறமையையும், தனித்துவமான ஸ்டைலையும் வெளிப்படுத்தி ரசிகர்கள் மனங்களைக் கவர்ந்துவிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை