UA-201587855-1 Tamil369news ஓட்டம், நடை, சிட்டிங் இதுதான் ஆர்சிபி; தொடர்ந்து 7-வது தோல்வி: ஈஸி சேஸிங்; சிஎஸ்கே மீண்டும் முதலிடம்

ஓட்டம், நடை, சிட்டிங் இதுதான் ஆர்சிபி; தொடர்ந்து 7-வது தோல்வி: ஈஸி சேஸிங்; சிஎஸ்கே மீண்டும் முதலிடம்

பிராவோவின் பந்துவீச்சு, பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு ஆகியவற்றால் ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 35-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்தது. 157 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 11 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை