UA-201587855-1 Tamil369news நியூஸி.டெஸ்ட் தொடர்: இந்திய அணிக்கு பின்னடைவு; கே.எல்.ராகுல் விலகல்: புதிய வீரர் சேர்ப்பு 

நியூஸி.டெஸ்ட் தொடர்: இந்திய அணிக்கு பின்னடைவு; கே.எல்.ராகுல் விலகல்: புதிய வீரர் சேர்ப்பு 


நியூஸிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் தொடருக்கு ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் இருவரும் இல்லை, முதல் டெஸ்டில் கேப்டன் கோலியும் விளையாடாத சூழலில் தற்போது அணியில் கே.எல்.ராகுலும் இல்லாதது பின்னடைவுதான். ராகுல் இடத்தை நிரப்ப பல வீரர்கள் இருந்தாலும் அனுபவமான வீரர்கள் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியதுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை