UA-201587855-1 Tamil369news முதல் பார்வை: மாநாடு - சிம்புவின் கம்பேக் சினிமா!

முதல் பார்வை: மாநாடு - சிம்புவின் கம்பேக் சினிமா!

துபாயில் பணியாற்றும் அப்துல் காலிக் (சிம்பு) நண்பனின் திருமணத்தை நடத்தி வைக்க இந்தியாவுக்கு வருகிறார். விமானத்தில் அவருக்கு அறிமுகமாகிறார் சீதாலட்சுமி (கல்யாணி ப்ரியதர்ஷன்). அவரிடம் பேசுகையில் தான் செல்லும் அதே திருமணத்துக்குத் தான் அவரும் செல்கிறார் என்பதைத் தெரிந்துகொள்கிறார் சிம்பு. மணப்பெண்ணை அங்கிருந்து கடத்தி அவரைத் தனது நண்பன் பிரேம்ஜிக்குத் திருமணம் செய்துவைப்பதுதான் சிம்புவின் திட்டம்.

மணப்பெண்ணை மற்றொரு நண்பரான கருணாகரன் உதவியுடன் காரில் அழைத்துச் செல்லும்போது காரின் குறுக்கே ஒருவர் வந்து விழுகிறார். அடிபட்டுக் காயங்களுடன் கிடக்கும் அவரை மருத்துவமனை அழைத்துச் செல்ல எத்தனிக்கும்போது அங்கு வரும் போலீஸ் அதிகாரியான தனுஷ்கோடி (எஸ்.ஜே.சூர்யா) அவர்கள் நால்வரையும் ஒரு பாழடைந்த கட்டிடத்துக்கு அழைத்துச் செல்கிறார். அன்று இரவு நடக்கும் மாநாட்டில் முதலமைச்சரைக் கொலை செய்வதுதான் எஸ்.ஜே.சூர்யாவின் நோக்கம். அதற்கு ஏற்பாடு செய்திருந்த ஆள் சிம்புவின் காரில் அடிபட்டு விட்டதால் தனது திட்டத்துக்கு சிம்புவைப் பயன்படுத்துகிறார் எஸ்.ஜே.சூர்யா. மாநாட்டுத் திடலுக்குச் செல்லும் அங்கு துப்பாக்கியை எடுத்து முதலமைச்சரைக் கொல்கிறார். அதன் பிறகு அங்கு வரும் போலீஸார் சிம்புவைச் சுட்டுக் கொல்கின்றனர். மீண்டும் விமானத்தில் கண்விழிக்கிறார் சிம்பு.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை