UA-201587855-1 Tamil369news நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் கரோனா தொற்றால் கவலைக்கிடம்

நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் கரோனா தொற்றால் கவலைக்கிடம்

நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். எனினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய விருது பெற்றுள்ள நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் தமிழ், தெலுங்கு, இந்தி என 800க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். தமிழில் 'வரலாறு', 'பரதேசி', 'தானா சேர்ந்த கூட்டம்', 'சர்கார்' உள்ளிட்ட பல படங்களிலும் சில முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை