ஹராரே: வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலக்கை வெற்றிகரமாக விரட்டி பிடித்துள்ளது ஜிம்பாப்வே அணி. இதன் மூலம் பத்து பந்துகள் எஞ்சியிருக்க 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது அந்த அணி.
வங்கதேச கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக, இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை ஜிம்பாப்வே அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில், இப்போது இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்