UA-201587855-1 Tamil369news IND vs WI | சூர்யகுமார் யாதவின் 360 டிகிரி ஆட்டம் - 7 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இந்தியா

IND vs WI | சூர்யகுமார் யாதவின் 360 டிகிரி ஆட்டம் - 7 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இந்தியா

செயின்ட் கிட்ஸ்: மூன்றாவது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி ஏழு விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்திய அணி.

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா. இந்நிலையில், இரு அணிகளும் தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியின் மேற்கிந்திய தீவுகளும் வென்ற நிலையில் இன்று மூன்றாவது போட்டி நடந்தது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் மேற்கிந்திய தீவுகளை பேட்டிங் செய்ய பணித்தார். அந்த அணியின் பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ் இணை 50+ பார்ட்னர்ஷிப் எடுத்து சிறப்பான துவக்கம் கொடுத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை