UA-201587855-1 Tamil369news T20 WC | ஷாஹீன் அஃப்ரீடியை எப்படி சமாளிப்பது? - இந்திய வீரர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் டிப்ஸ்

T20 WC | ஷாஹீன் அஃப்ரீடியை எப்படி சமாளிப்பது? - இந்திய வீரர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் டிப்ஸ்

முந்தைய டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர டாப் ஆர்டர் வரிசையை சரித்த பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரீடி முழு உடல்தகுதி பெற்று டி20 உலகக்கோப்பைக்காக பாகிஸ்தான் அணியுடன் இணைந்துள்ளார்.

கடந்த டி20 உலகக்கோப்பையில் ஷாஹின் அஃப்ரீடி இந்திய டாப் ஆர்டருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். அதுவும் ரோகித் சர்மாவை வந்தவுடனேயே ஒரு கர்வ் யார்க்கர் லெந்த் பந்தில் எல்.பி. ஆக்கி அதிர்ச்சி கொடுத்தார். கே.எல்.ராகுலுக்கு ஒரு பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆக்கி உள்ளே கொண்டு வர, பந்து வரும் திசைக்கு எதிராக ராகுல் ஆடப்போய் தொடையில் பட்டு ஸ்டம்பில் பட்டு பவுல்டு ஆனார். விராட் கோலி அதிகபட்சமாக 57 ரன்களை எடுத்தார், அவரையும் ஷாஹின் அஃப்ரீடிதான் வீழ்த்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை