UA-201587855-1 Tamil369news ''வேடிக்கையான ட்ரோல்களை ரசித்தேன்'' - 'காசேதான் கடவுளடா' பாடல் குறித்து மஞ்சுவாரியர்

''வேடிக்கையான ட்ரோல்களை ரசித்தேன்'' - 'காசேதான் கடவுளடா' பாடல் குறித்து மஞ்சுவாரியர்

அஜித் நடிக்கும் ‘துணிவு’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘காசேதான் கடவுளடா’ வெளியாகியுள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா சில்லா’ பாடல் கடந்த மாதம் 9-ம் தேதி வெளியானது. இந்நிலையில் நேற்று படத்தின் இரண்டாவது பாடலான ‘காசே தான் கடவுளடா’ பாடல் வெளியாகியுள்ளது.

அஜித் ரசிகர்கள் இதனை ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர். இந்தப் பாடலை வைசாகன் என்பவர் எழுதிப்பாடியுள்ளார். இந்தப்பாடலில் மஞ்சுவாரியர் இணைந்து பாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் குரல் கோரஸில் மறைந்திருப்பதை உணர முடிகிறது. இதையடுத்து மஞ்சுவாரியர் குறித்த ட்ரோல்கள் அதிகரித்துள்ளன. இந்த ட்ரோல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு பதிவை நடிகை மஞ்சுவாரியர் வெளியிட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை