UA-201587855-1 Tamil369news FIFA WC 2022 | அற்புதங்கள் நிகழ்த்துவாரா லயோனல் மெஸ்ஸி? - நெதர்லாந்துடன் இன்று பலப்பரீட்சை

FIFA WC 2022 | அற்புதங்கள் நிகழ்த்துவாரா லயோனல் மெஸ்ஸி? - நெதர்லாந்துடன் இன்று பலப்பரீட்சை

தோகா: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு லுசைல் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் அர்ஜெண்டினா – நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

உலகக் கோப்பை வரலாற்றில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மோதல் எப்போதுமே சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இல்லாமல் இருந்துள்ளது. அர்ஜெண்டினா இரு முறை சாம்பியன் என்ற அந்தஸ்துடனும், நெதர்லாந்து 3 முறை 2-ம் இடம் பிடித்த அணி என்ற பெயருடனும் களமிறங்குகின்றன. இன்றைய ஆட்டமானது எல்லா காலத்திலும் சிறந்து விளங்கும் அர்ஜெண்டினாவின் முன்கள வீரரான லயோனல் மெஸ்ஸிக்கும், நவீன கால்பந்து உலகின் சிறந்த டிபன்டரான நெதர்லாந்தின் விர்ஜில் வான் டிஜ்-க்கும் இடையிலான மோதலாக பார்க்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை