UA-201587855-1 Tamil369news IPL 2023 | சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்த கான்வே, சான்ட்னர்!

IPL 2023 | சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்த கான்வே, சான்ட்னர்!

சென்னை: வரும் 31-ம் தேதி துவங்க உள்ள ஐபிஎல் 2023 சீசனை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ளனர் டெவோன் கான்வே மற்றும் மிட்செல் சான்ட்னர். இதனை சிஎஸ்கே அணி நிர்வாகம் சமூக வலைதள பதிவு மூலம் உறுதி செய்துள்ளது.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 31) நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் விளையாட உள்ளது. இந்நிலையில், ஐபிஎல் சீசனை முன்னிட்டு சென்னை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் சென்னையில் அதற்கான தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். தோனி, ஜடேஜா, ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி என அனைவரும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை