UA-201587855-1 Tamil369news 2 பந்துகளில் 10 ரன்கள் விளாசியது எப்படி? - மனம் திறக்கும் ரவீந்திர ஜடேஜா

2 பந்துகளில் 10 ரன்கள் விளாசியது எப்படி? - மனம் திறக்கும் ரவீந்திர ஜடேஜா

அகமதாபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது சிஎஸ்கே அணி. 6 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என 15 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்த ரவீந்திர ஜடேஜா கூறியதாவது:

என்னுடைய சொந்த மண்ணில் ரசிகர்கள் முன்னிலையில் ஐந்தாவது முறையாக சாம்பியன் வென்றது அற்புதமான உணர்வு. சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரிய அளவில் வாழ்த்துகளை கூற வேண்டும். இந்த வெற்றியை எங்கள் அணியின் சிறப்பு உறுப்பினர்களில் ஒருவரான எம்எஸ் தோனிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். கடைசி இரு பந்துகளில் என்னால் முடிந்தவரை கடினமாக மட்டையை சுழற்ற வேண்டும் என்று நினைத்தேன். மோஹித் சர்மா மெதுவாக பந்து வீசக்கூடியவர் என்பதால் நேர் திசையில் அடிக்க நினைத்தேன். அது சரியாக அமைந்தது. சிஎஸ்கேவின் ஒவ்வொரு ரசிகருக்கும் வாழ்த்துக்களை சொல்ல விரும்புகிறேன். இவ்வாறு ஜடேஜா கூறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை