சென்னை: யூடியூபர் டிடிஎப் வாசன் நடிக்கும் மஞ்சள் வீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. வாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது.
யூடியூபில் பிரபல டிராவல் பிளாகராக வலம் வரும் கோவையைச் சேர்ந்த டிடிஎப் வாசன் எனும் இளைஞருக்கு பல லட்ச கணக்கான சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். இவரது ஃபாலோயர்களில் பெரும்பாலானோர் இளம் தலைமுறையினர். கடந்த ஆண்டு இவர் தனது பிறந்தநாளை ஒட்டி, தன்னைப் பின்தொடர்வோருடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார். இந்த மீட்டப்பில் ஆயிரக்கணக்கனோர் திரண்டதால் போலீஸ் எச்சரிக்கும் அளவுக்கு அது சென்றது. அவரது அழைப்பு ஏற்று வந்த ஆயிரக்கணக்கானோரில் பலரும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள். இவரது இந்த ‘மாஸ்’ சந்திப்பு குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்களாகவும் எழுந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்