UA-201587855-1 Tamil369news தறகசய கலபநத கடடமபப சமபயனஷப: பகஸதன 4-0 எனற கல கணககல வழததயத இநதய

தறகசய கலபநத கடடமபப சமபயனஷப: பகஸதன 4-0 எனற கல கணககல வழததயத இநதய

பெங்களூரு: தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேற்று பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் மோதின.இதில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 10-வது நிமிடத்தில் கோல் அடித்துஅசத்திய கேப்டன் சுனில் சேத்ரி 16, 72-வது நிமிடங்களில் பெனால்டி வாய்ப்புகளை கோலாக மாற்றினார். தொடர்ந்து 81-வது நிமிடத்தில் உதாந்த சிங் குமம் கோல் அடித்தார்.

இந்த ஆட்டத்தில் சுனில் சேத்ரி 3 கோல்கள் அடித்ததன் மூலம் ஆசிய கால்பந்து வீரர்களில் அதிககோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்து சாதனை படைத்தார். இந்த மைல் கல் சாதனையை சுனில் சேத்ரி தனது138-வது ஆட்டத்தில் நிகழ்த்தி உள்ளார். இதற்கு முன்னர் ஆசிய வீரர்களில் மலேசியாவின் மொக்தார் தஹாரி (1972 முதல் 1985 வரை) 89 கோல்கள் அடித்து 2-வது இடம் வகித்திருந்தார். தற்போது சுனில் சேத்ரி 90 கோல்களுடன் அவரை பின்னுக்குத் தள்ளி உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை