நியூயார்க்: டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக ஆழ்கடலுக்கு சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்னரே ‘தி சிம்ப்ஸன்ஸ்; தொடர் கணித்திருப்பதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 1912ஆம் ஆண்டு பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலின் சிதிடமடைந்த பகுதிகள், கனடா அருகே அட்லான்டிக் கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது. ஆழ்கடலில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலின் பாகங்களை பார்வையிடும் சாகச சுற்றுலாவை அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் என்ற நிறுவனம் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இதற்காக ‘டைட்டன்’ என்ற சிறப்பு நீர்மூழ்கிக் கப்பல் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒரு பைலர் மற்றும் 4 பயணிகள் என 5 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இந்தப் பயணத்துக்கு ஒருவருக்கு ரூ.2 கோடி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்