UA-201587855-1 Tamil369news அரபபககடட பனனணயல சததய சதன

அரபபககடட பனனணயல சததய சதன

சென்னை: ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுரேஷ் சங்கையா. இதில் விதார்த், ரவீனா ரவி உட்பட பலர் நடித்திருந்தனர். 2017-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குப் பல்வேறு விருதுகள் கிடைத்தன. இதையடுத்து சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள படம், ‘சத்திய சோதனை’. இதில் பிரேம்ஜி நாயகனாக நடித்துள்ளார். ஸ்வயம் சித்தா, ரேஷ்மா, கு.ஞானசம்பந்தம், ‘சித்தன்’ மோகன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதன் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 21-ம் தேதி வெளியாகிறது.

இயக்குநர் சுரேஷ் சங்கையா படம் பற்றி கூறும்போது, “ இது அருப்புக்கோட்டை பின்னணியில் நடக்கும் கதை. சிறு நகரங்களில் காவல் நிலையம், நீதிமன்றம் எப்படி இயங்குகிறது என்பதை இந்தப் படம் சொல்லும். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப் பட்டுள்ளது. இதுவரை படங்களில் பார்த்த பிரேம்ஜி இதில் தெரியமாட்டார். அவர் ஸ்டைலும் இருக்காது. வித்தியாசமான பிரேம்ஜியை இதில் பார்க்கலாம். பார்வையாளர்கள் கதையோடு தங்களைத் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும் ” என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை