UA-201587855-1 Tamil369news இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ், 222 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ், 222 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி

கொழும்பு: இலங்கைக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி முழுமையாக 2-0 என கைப்பற்றியது.

கொழும்பு நகரில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 132 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 563 ரன்கள் எடுத்தது. அப்துல் ஷபிக் 201 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அகா சல்மான் 132, மொகமது ரிஸ்வான் 37 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை