பாங்காக்: நடப்பு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 27 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது இந்தியா. 6 தங்கம், 12 வெள்ளி மற்றும் 9 வெண்கல பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் நகரில் நடைபெற்றது. 42 நாடுகளை சேர்ந்த தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர். ஜூலை 12 முதல் 16-ம் தேதி வரையில் இந்த தொடர் நடைபெற்றது. கடைசி நாளன்று இந்திய வீரர்கள் மொத்தம் 13 பதக்கங்களை வென்று அசத்தினர். எட்டு வெள்ளி மற்றும் 5 வெண்கலம் இதில் அடங்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்