UA-201587855-1 Tamil369news 6 சிக்ஸர்கள் முதல் 600+ விக்கெட்கள் வரை: ஓய்வை அறிவித்த ஸ்டூவர்ட் பிராடுக்கு யுவராஜ் வாழ்த்து

6 சிக்ஸர்கள் முதல் 600+ விக்கெட்கள் வரை: ஓய்வை அறிவித்த ஸ்டூவர்ட் பிராடுக்கு யுவராஜ் வாழ்த்து

மும்பை: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட். இந்நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்.

37 வயதான ஸ்டூவர்ட் பிராட், கடந்த 2006-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என அவரது அறிமுகம் அமைந்தது. இருந்த போதும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்கள் கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் 6-வது இடத்தில் அவர் உள்ளார். இதுவரை 167 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 602 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை