UA-201587855-1 Tamil369news கார்த்திக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?

கார்த்திக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?

சென்னை: தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருகிறார், விஜய் சேதுபதி. இப்போது ‘ஜவான்’படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்துள்ளார். அடுத்து ராம் சரண் நடிக்கும் தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் அவர் கார்த்திக்கு வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம், ‘சர்தார்’. பி.எஸ்.மித்ரன் இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. முதல் பாகத்தைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் கார்த்திக்கு விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை