UA-201587855-1 Tamil369news ஷங்கருடன் மீண்டும் இணைகிறார் விஜய்?

ஷங்கருடன் மீண்டும் இணைகிறார் விஜய்?

சென்னை: நடிகர் விஜய், ‘லியோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். விஜய்யின் 68-வது படமான இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. இதற்கிடையே விஜய் அரசியலுக்கு வர இருப்பதாகவும் அதற்காக 3 வருடங்கள் சினிமாவில் இருந்து விலக இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால், விஜய் தரப்பில் அதை மறுத்துள்ளனர். இந்நிலையில் விஜய், இயக்குநர் ஷங்கருடன் இணைய போவதாகக் கூறப்படுகிறது.

விஜய் நடித்த ‘ நண்பன்’ படத்தை ஏற்கெனவே இயக்கி இருந்தார், ஷங்கர். இப்போது அரசியல் த்ரில்லர் கதையை அவர் இயக்க இருப்பதாகவும் இதற்கான ஒன்லைனை விஜய்யிடம் கூறி ஓகே வாங்கி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது விஜய்யின் 70-வது படமாக இருக்கும் என்றும் 69-வது படத்தை அட்லி இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை