UA-201587855-1 Tamil369news மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் முதல் டெஸ்டில் இன்று மோதல்: அனுபவம் இல்லாத வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகிறது இந்திய அணி

மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் முதல் டெஸ்டில் இன்று மோதல்: அனுபவம் இல்லாத வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகிறது இந்திய அணி

டொமினிகா: இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள்இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட்கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி டொமினிகாவில் இன்று இரவு தொடங்குகிறது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே 2 டெஸ்ட், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இதில் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் டொமினிகாவில் உள்ள வின்ட்ஸர் பார்க் மைதானத்தில் இன்று இரவு தொடங்குகிறது. இரு அணிகளுக்குமே ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இது முதல் போட்டியாகும். இதனால் இந்தத் தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை