UA-201587855-1 Tamil369news ஏ சான்றிதழால் சிக்கல்: தான் நடித்த படத்தை பார்க்க 16 வயது நடிகருக்கு தடை

ஏ சான்றிதழால் சிக்கல்: தான் நடித்த படத்தை பார்க்க 16 வயது நடிகருக்கு தடை

அமித் ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், பங்கஜ் திரிபாதி, யாமி கவுதம் உட்பட பலர் நடித்துள்ள இந்திப் படம், ‘ஓ.எம்.ஜி 2’. இதில், சிவபெருமானின் தூதுவராக அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். சிவபக்தராக பங்கஜ் திரிபாதி நடித்துள்ளார். இவர் மகனாக 16 வயது ஆருஷ் வர்மா நடித்துள்ளார். இது பாலியல் குறித்த விஷயங்களைப் போதிப்பதால், தணிக்கைக் குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்க்க அனுமதியில்லை. கடந்த 11-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு வடமாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆக்ராவில் இந்து அமைப்பினர் திரையரங்க வாசலில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் இதில் நடித்துள்ள ஆருஷ் வர்மாவுக்கு 16 வயது என்பதால், தான் நடித்த படத்தைத் திரையரங்கில் பார்க்க முடியாமல் தவித்து வருகிறார். இதுபற்றி அவர் உறவினர்கள் கூறும்போது, “நாங்கள் குடும்பத்துடன் ஆருஷின் படத்தைப் பார்க்கச் சென்றோம். ஆனால் அவரால், தான் நடித்த படத்தை பார்க்க முடியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது” என்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை