UA-201587855-1 Tamil369news 2-வது ஆட்டத்தில் அயர்லாந்துடன் இன்று மோதல்: டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

2-வது ஆட்டத்தில் அயர்லாந்துடன் இன்று மோதல்: டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

டப்ளின்: ஜஸ்பிரீத் பும்ரா தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய கிரிக்கெட் அணி 3 டி 20 ஆட்டங்களில் விளையாடுவதற்காக அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டப்ளின் நகரில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பும்ராவை மையமாக கொண்ட பந்து வீச்சு குழு அயர்லாந்து அணியை 139 ரன்களுக்குள் மட்டுப்படுத்தியது.

140 ரன் இலக்கை இந்திய அணி துரத்திய நிலையில் 6.5 ஓவர்களில் 2விக்கெட்கள் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால் வெற்றியை தீர்மானிக்க டக்வொர்த் லீவிஸ் விதி அமல்படுத்தப்பட்டது. இதில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை