UA-201587855-1 Tamil369news இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: மே.இந்தியத் தீவுகள் அணியில் ஷாய் ஹோப், ஒஷேன் தாமஸ்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: மே.இந்தியத் தீவுகள் அணியில் ஷாய் ஹோப், ஒஷேன் தாமஸ்

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: இந்திய கிரிக்கெட் அணி, மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து தற்போது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இதைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடர் நடைபெறவுள்ளது.

முதல் போட்டி ஆகஸ்ட் 3-ம் தேதி டிரினிடாட்டிலும், 2 மற்றும் 3-வதுபோட்டிகள் முறையே 6, 8-ம் தேதிகளில் கயானாவிலும் நடைபெறவுள்ளன. 4, 5-வது போட்டிகள் முறையே 12, 13-ம் தேதிகளில் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம் லாடர் ஹில்லில் நடைபெறவுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை