பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உலக வில்வித்தையின் 4-ம் நிலை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ரீகர்வ் அணிகள் ஆடவர் பிரிவில் தீரஜ் பொம்மதேவரா, அதானு தாஸ், துஷார் ஷெல்கே ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 6-2 என்ற கணக்கில் ஆண்ட்ரெஸ் டெமினோ, யுன் சான்செஸ், பாப்லோ அச்சா ஆகியோரை உள்ளடக்கிய ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது.
முன்னதாக இந்திய ஆடவர் அணி அரை இறுதி சுற்றில் 0-6 என்ற கணக்கில் சீன தைபேவிடம் தோல்வி அடைந்து தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் போட்டியிடும் வாய்ப்பை இழந்திருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்