UA-201587855-1 Tamil369news ’கடைசி விவசாயி’-க்கு 2 தேசிய விருதுகள் - நெகிழ்வுடன் நன்றி தெரிவித்துள்ள இயக்குநர் மணிகண்டன்

’கடைசி விவசாயி’-க்கு 2 தேசிய விருதுகள் - நெகிழ்வுடன் நன்றி தெரிவித்துள்ள இயக்குநர் மணிகண்டன்

சென்னை: ’கடைசி விவசாயி’ படத்துக்கு இரண்டு தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறித்து இயக்குநர் மணிகண்டன் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கடைசி விவசாயி’. இதில் விவசாயியாக நடித்த நல்லாண்டி யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அவருடன் விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்துக்கு சந்தோஷ் நாராயணன், ரிச்சர்ட் ஹார்வி இசையமைத்திருந்தனர். அழுத்தமான திரைக்கதையால் விமர்சன ரீதியாக படம் நல்ல வரவேற்பை பெற்றது. படம் வெளியாவதற்கு முன்பே நல்லாண்டி உடல்நலக்குறைவால் காலமானார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை