UA-201587855-1 Tamil369news WWE முன்னாள் சாம்பியன் ப்ரே வியாட் உடல்நலக்குறைவால் மறைவு

WWE முன்னாள் சாம்பியன் ப்ரே வியாட் உடல்நலக்குறைவால் மறைவு

மியாமி: முன்னாள் WWE சாம்பியன் ப்ரே வியாட் உடல்நலக்குறைவால் மறைந்தார். அவருக்கு வயது 36.

2009ஆம் ஆண்டு முதல் WWE மல்யுத்த போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வந்தவர் ப்ரே வியாட். மைக் ரோட்டுண்டா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், 2010 முதல் 2011 வரை ஹஸ்கி ஹாரிஸ் என்ற பெயரில் போட்டிகளில் கலந்து கொண்டார். பின்னர் தனது பெயரை ப்ரே வியாட் என்று மாற்றினார். இதுவரை இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ரஸ்ல்மேனியா போட்டிகளில் கலந்துகொண்டு புகழ்பெற்ற WWE வீரர்களாக தி அண்டர்டேக்கர், ஜான் சீனா, ரேண்டி ஆர்ட்டன் ஆகியோருடன் மோதியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை