UA-201587855-1 Tamil369news தென்னிந்திய சினிமாவின் பணக்கார நடிகர் யார்?

தென்னிந்திய சினிமாவின் பணக்கார நடிகர் யார்?

தென்னிந்திய திரைத்துறையின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், சிரஞ்சீவி, விஜய், அஜித், வெங்கடேஷ், மோகன்லால், மம்மூட்டி ஆகியோரின் சம்பளம் பல கோடிகளில் இருக்கின்றன. ஆனால், இவர்கள் எல்லோரையும் விட சொத்து மதிப்பில் டாப்பில் இருக்கிறார் நாகார்ஜுனா. அவரின் சொத்து மதிப்பு ரூ.3 ஆயிரம் கோடி என்கிறார்கள்.

ஒரு படத்துக்கு ரூ.9 கோடியில் இருந்து ரூ.20 கோடி சம்பளம் வாங்கும் அவர் விளம்பரங்களுக்கு ரூ.2 கோடி வாங்குகிறார். இருந்தாலும் அவர் தந்தையும், நடிகருமான நாகேஷ்வர ராவ் தொடங்கிய அன்னப்பூர்ணா பிலிம் ஸ்டூடியோவின் பங்குதாரர், மீடியா ஸ்கூல், கன்வென்ஷன் சென்டர் என பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளதன் மூலம் அவருக்கு இவ்வளவு சொத்து மதிப்பு உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை