UA-201587855-1 Tamil369news ஆசிய கோப்பை கிரிக்கெட் | நேபாள அணியில் சந்தீப் லமிச்சனேவுக்கு இடம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் | நேபாள அணியில் சந்தீப் லமிச்சனேவுக்கு இடம்

காத்மாண்டு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 17 பேர் கொண்ட நேபாள அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சந்தீப் லமிச்சனே சேர்க்கப்பட்டுள்ளார். ஆல்ரவுண்டன்ர் ரோஹித் பவுடல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பாகிஸ்தான், இலங்கை நாடுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய 6 அணிகள் கலந்துகொள்கின்றன. இந்த தொடரில் கலந்துகொள்ளும் நேபாளம் அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் பாகிஸ்தானுடன் 30-ம் தேதி மோதுகிறது. இந்த ஆட்டம் முல்தானில் நடைபெறுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை