UA-201587855-1 Tamil369news WI vs IND 3-வது டி20: அஜித்குமாரின்‌ 'விடாமுயற்சி' பட‌ அப்டேட் கேட்ட சிறுவன்

WI vs IND 3-வது டி20: அஜித்குமாரின்‌ 'விடாமுயற்சி' பட‌ அப்டேட் கேட்ட சிறுவன்

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த படம் 'வலிமை'. இப்படம் படமாக்கப்பட்ட சமயத்தில் படம் தொடர்பாக எந்தவொரு அப்டேட்டும் படக்குழுவினர் கொடுக்கவில்லை என்பதால், இது தொடர்பாகப் பிரபலங்களிடம் 'வலிமை' அப்டேட் கேட்டு வந்தனர் அஜித் ரசிகர்கள்.

இது சமூக வலைதளத்தில் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. இதைத் தாண்டி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி உள்ளிட்டோரிடமும் "வலிமை அப்டேட்" என்று கேட்டு வந்தார்கள். கடந்த 2021-ல் சென்னையில் இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மொயின் அலியிடம் வலிமை பட‌ அப்டேட் கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை