UA-201587855-1 Tamil369news மறக்குமா நெஞ்சம் | 2007-ல் இதே நாளில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசிய யுவராஜ் சிங்!

மறக்குமா நெஞ்சம் | 2007-ல் இதே நாளில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசிய யுவராஜ் சிங்!

சென்னை: கடந்த 2007-ல் இதே நாளில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி மிரட்டி இருந்தார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். அந்தப் போட்டியில் 12 பந்துகளில் 50 ரன்களை பதிவு செய்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை புரிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்காவில் 2007-ல் நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான சூப்பர்-8 சுற்றுப் போட்டியில் யுவராஜ் இந்த சாதனையை படைத்திருந்தார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. கவுதம் கம்பீர், சேவாக் மற்றும் யுவராஜ் ஆகியோர் அரைசதம் கடந்தனர். இதில் யுவராஜின் ஸ்ட்ரைக் ரேட் 362.50. மொத்தம் 16 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்களை விளாசி இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை