UA-201587855-1 Tamil369news ஆயிரம் பிறை கண்ட சிரஞ்சீவி சிவகுமார்! - ஓர் அனுபவ பகிர்வு

ஆயிரம் பிறை கண்ட சிரஞ்சீவி சிவகுமார்! - ஓர் அனுபவ பகிர்வு

சினிமா உலகின் சிரஞ்சீவி நடிகர் சிவகுமார் தனது 80 வயதைக் கடந்த ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதியன்று நிறைவு செய்தார். இதனையொட்டி அவருக்கு வாழ்த்துச் சொல்ல வாய்ப்பொன்று என்.சி. மோகன்தாஸ் புண்ணியத்தில் அடியேனுக்கும் கிட்டியது. பெருந்திரையுலகப் பிதாமகனாக விளங்கி, புரட்சி நடிகராகத் தொடங்கி, மக்கள் திலகமாக மலர்ந்து புகழின் உச்சியில் இருந்தபோதே மறைந்து போன எம்.ஜி.ஆரின் நினைவில்லம் அருகேதான் நடிகர் சிவகுமார் வீடு. தி.நகரில் உள்ள ஆற்காடு சாலையில் இருக்கும் அவரின் இல்லம் வண்ணக் குறு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நுழைவாயிலில் காவலர் காத்திருந்தார்.

“நீங்கள் வந்தால் உடன் உள்ளே அழைத்து வரச்சொல்லி உத்தரவு. எனவே வாருங்கள்” என்று கூறியபடியே காவலர் என்னை அழைத்துக்கொண்டு உள்ளே போனார். சிவகுமாரும் விருந்தினர்களும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த அரங்கினுள் நான் நுழைந்ததும் அனைவரும் என்னுடன் நேசம் பேசி, நலம் விசாரித்தனர். பின்னர் அந்த நிகழ்ச்சியின் நாயகன் சிவகுமாருடனான உரையாடல் தொடர்ந்தது. சிவகுமார் மூச்சுவிடாமல் முழங்கினார். நாங்களோ செவிகளை மட்டுமல்ல; சிந்தையைக் கூடத் திறந்துவைத்து சிவகுமாரின் சிந்தனைகளை பெற்றுப் போற்றிக் கொண்டே மெய்மறந்து அமர்ந்து நிமிர்ந்தோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை