ஹாங்சோ: சீனாவின் ஹாங்சோ நகரில் 4-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 4-வது நாளான நேற்றைய ஆட்டங்களின் முடிவில் இந்தியா 18 தங்கம், 23 வெள்ளி, 41 வெண்கலம் என 82 பதக்கங்களை குவித்து பதக்கப் பட்டியலில் 8-வது இடம் வகித்தது. பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா அதிகஅளவிலான பதக்கங்களை வெல்வது இதுவே முதன் முறையாகும்.
இதற்கு முன்னர் இந்தோனேஷியாவில் கடந்த 2018-ம்ஆண்டு நடைபெற்ற தொடரில்அதிகபட்சமாக இந்தியா 72(15 தங்கம், 24 வெள்ளி, 33 வெண்கலம்) பதக்கங்களை வென்றிருந்தது. இம்முறை 2 நாட்கள் போட்டி இன்னும் எஞ்சியுள்ள நிலையில் தற்போது இந்தியா 82 பதக்கங்களை குவித்து வரலாற்று சாதனை நிகழ்த்தி உள்ளது. இந்த பதக்கங்களின் எண்ணிக்கை 100-ஐ எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்