UA-201587855-1 Tamil369news 37-வது தேசிய விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: வாள்வீச்சில் பவானி தேவி தங்கம் வென்று அசத்தல்

37-வது தேசிய விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: வாள்வீச்சில் பவானி தேவி தங்கம் வென்று அசத்தல்

பனாஜி: 37-வது தேசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான வாள் வீச்சில் தமிழகத்தின் சி.ஏ.பவானி தேவி தங்கப் பதக்கம் வென்றார்.

37-வது தேசிய விளையாட்டு போட்டி நேற்று கோவாவில் தொடங்கியது. கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோவா மாநில முதல்வர் பிரமோத்சாவந்த், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்அனுராக் தாக்குர், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர்பி.டி.உஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தொடக்க விழா நிகழ்ச்சியில் கண்கவர்கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.போட்டியில் கலந்துகொண்டுள்ள 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங் களின் அணி வகுப்பு நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை