UA-201587855-1 Tamil369news ODI WC 2023 | இலங்கையை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி 102 ரன்களில் வெற்றி

ODI WC 2023 | இலங்கையை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி 102 ரன்களில் வெற்றி

டெல்லி: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 4-வது போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

429 ரன்கள் என்ற மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு குசல் பெரேரா 7 ரன்களுக்கு அவுட் ஆனாலும், குசல் மெண்டிஸ் 76 ரன்கள் எடுத்து கைகொடுத்தார். அதேபோல் சரித் அசலங்கா 79, தசுன் ஷனகா 68, கசுன் ராஜிதா 33, சதீர சமரவிக்ரம 23 ரன்கள் எடுத்து உதவினர். ஆனால், தனஞ்ஜெயா டி சில்வா 11, மதீஷா பதிரனா 5, தில்ஷான் மதுஷங்கா 4 ரன்கள் என மற்ற வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதுடன் விரைவாக விக்கெட்டையும் பறிகொடுத்தனர். இதனால் இலங்கை அணி 44.5 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் தென்னாப்பிரிக்கா அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை