UA-201587855-1 Tamil369news ODI WC 2023 | 49 பந்தில் சதம் விளாசி எய்டன் மார்க்ரம் சாதனை

ODI WC 2023 | 49 பந்தில் சதம் விளாசி எய்டன் மார்க்ரம் சாதனை

புதுடெல்லி: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் 49 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார்.

டெல்லி அருண் ஜேட்லிமைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 428 ரன்கள் குவித்தது. குயிண்டன் டி காக் 84 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 100 ரன்களும், ராஸிவான் டெர் டஸ்ஸன் 110 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 108 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை