லக்னோ: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. உலகக் கோப்பையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தை, இந்திய அணி வீழ்த்தியுள்ளது.
இந்த ஆட்டம் நேற்று பிற்பகல் 2 மணிக்கு லக்னோ நகரிலுள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகனா மைதானத்தில் நடைபெற்றது. டாஸை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன்ஜாஸ் பட்லர், முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்