UA-201587855-1 Tamil369news ODI WC 2023 | “அணிக்கு பெரிய பங்களிப்பு தர விரும்பினேன்” - ஆட்ட நாயகன் விராட் கோலி

ODI WC 2023 | “அணிக்கு பெரிய பங்களிப்பு தர விரும்பினேன்” - ஆட்ட நாயகன் விராட் கோலி

புனே: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 17-வது போட்டியில் வங்கதேச அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இந்தியா. இந்தப் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதம் விளாசி இருந்தார். அதன் மூலம் ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றார்.

நடப்பு தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடி உள்ள விராட் கோலி, 259 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 அரை சதம் மற்றும் சதம் அடங்கும். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் கோலி பதிவு செய்த இந்த சதத்துடன் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் 48 சதங்களை பதிவு செய்துள்ளார். ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 78-வது சதங்களை பதிவு செய்துள்ளார். அதே போல 26,000 ரன்களை கடந்துள்ளார். உலகக் கோப்பை அரங்கில் அவர் பதிவு செய்துள்ள 3-வது சதம். உலகக் கோப்பை தொடரில் ரன்களை சேஸ் செய்த போது அவர் பதிவு செய்துள்ள முதல் சதம் இது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை