மும்பை: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 23-வது போட்டியில் வங்கதேசத்தை 149 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது தென் ஆப்பிரிக்கா. மும்பை - வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் டிகாக் மற்றும் கிளாசன் அதிரடியாக ஆடி இருந்தனர்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 382 ரன்கள் எடுத்தது. டிகாக், 140 பந்துகளில் 174 ரன்கள் எடுத்திருந்தார். 15 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்களை அவர் விளாசினார். கிளாசன், 49 பந்துகளில் 90 ரன்கள் எடுத்தார். 2 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் இதில் அடங்கும். கேப்டன் மார்க்ரம், 69 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். 15 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்தார் மில்லர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்