UA-201587855-1 Tamil369news தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப்: மகாராஷ்டிராவை வீழ்த்தியது பஞ்சாப்

தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப்: மகாராஷ்டிராவை வீழ்த்தியது பஞ்சாப்

சென்னை: 13-வது ஆடவருக்கான தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

28 அணிகள் கலந்துகொண்டுள்ள இந்த தொடரில் 5-வது நாளான நேற்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் ‘டி’ பிரிவில் உள்ள பஞ்சாப் - மகாராஷ்டிரா அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் ஜுக்ராஜ் சிங் 26-வது நிமிடத்திலும், சிம்ரன்ஜித் சிங் 41-வது நிமிடத்திலும், தில்பிரீத் சிங் 51-வது நிமிடத்திலும், ஹர்மன்பிரீத் சிங் 54-வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை