UA-201587855-1 Tamil369news தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: வேலவன், அனாஹத் சிங் அரை இறுதிக்கு முன்னேற்றம்

தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: வேலவன், அனாஹத் சிங் அரை இறுதிக்கு முன்னேற்றம்

சென்னை: 79-வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் அனாஹத் சிங், பூஜா ஆர்த்தியை எதிர்த்து விளையாடினார்.

இதில் அனாஹத் சிங் 11-6, 11-8, 11-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். தொடர்ந்து மாலையில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் அனாஹத் சிங் 11-7, 11-2, 11-2 என்ற செட் கணக்கில் தியா யாதவை தோற்கடித்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் பிரிவில் வேலவன் செந்தில்குமார் கால் இறுதி சுற்றில் 11-3, 11-4, 11-7 என்ற செட் கணக்கில் வேதாந்த் படேலை தோற்கடித்து அரை இறுதி சுற்றில் கால்பதித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை