UA-201587855-1 Tamil369news ‘நான் ஒருபோதும் சச்சின் ஆக முடியாது’ - மனம் திறக்கும் விராட் கோலி

‘நான் ஒருபோதும் சச்சின் ஆக முடியாது’ - மனம் திறக்கும் விராட் கோலி

கொல்கத்தா: நான் ஒருபோதும் சச்சின் டெண்டுல்கராக இருக்க முடியாது எனவும், தனது ஹீரோவான அவரின் சாதனையை சமன் செய்தது சிறப்பான விஷயம் என இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேற்று முன்தினம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 121 பந்துகளில் 101 ரன்கள் விளாசினார். தனது 35-வது பிறந்த நாளில் சதம் விளாசிய விராட் கோலி, அதிக சதங்கள் விளாசிய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் (49 சதங்கள்) சாதனையை சமன் செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை