UA-201587855-1 Tamil369news ஐபிஎல் வீரர்கள் ஏல வரலாற்றில் சாதனை: ரூ.24.75 கோடிக்கு ஸ்டார்க்கை வாங்கியது கொல்கத்தா

ஐபிஎல் வீரர்கள் ஏல வரலாற்றில் சாதனை: ரூ.24.75 கோடிக்கு ஸ்டார்க்கை வாங்கியது கொல்கத்தா

துபாய்: ஐபிஎல் மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுத்து அனைவரையும் வியக்க வைத்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

2024-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நேற்று துபாயில் நடைபெற்றது. 333 வீரர்களை உள்ளடக்கிய பட்டியலில் இருந்து 10 அணிகளும் தங்களுக்கு நிரப்பப்பட வேண்டிய இடங்களை பூர்த்தி செய்தனர். ஆஸ்திரேலிய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கை ஏலம் எடுப்பதில் குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா அணி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை