வலென்சியா: ஸ்பெயினின் நாட்டின் வலென்சியா நகரில் 5 நாடுகள் கலந்து கொண்டுள்ள ஆடவருக்கான ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஸ்பெயினிடம் 0-1 என்ற கோல்கணக்கிலும், 2-வது ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் 2-7 என்ற கோல் கணக்கிலும் தோல்வி அடைந்திருந்தது. இந்நிலையில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் நேற்று ஜெர்மனியுடன் மோதியது. இதில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்