UA-201587855-1 Tamil369news துபாயில் இன்று ஐபிஎல் மினி ஏலம் | மொத்தம் 77 வீரர்களை தேர்வு செய்ய ரூ.262.95 கோடியை செலவிட உள்ள அணிகள்

துபாயில் இன்று ஐபிஎல் மினி ஏலம் | மொத்தம் 77 வீரர்களை தேர்வு செய்ய ரூ.262.95 கோடியை செலவிட உள்ள அணிகள்

துபாய்: ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி வீரர்கள் ஏலம் துபாயில் இன்று பிற்பகல் 1 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஏலத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் நேரலையாக காணலாம்.

ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி வீரர்கள் ஏலம் துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்த ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 333 வீரர்கள் உள்ளனர். இதில் வெளிநாட்டு வீரர்கள் 30 பேர் உட்பட மொத்தம் 77 வீரர்களை தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகளும் ஏலம் எடுக்க உள்ளன. மொத்தம் உள்ள 333 பேர் பட்டியலில் 214 பேர் இந்திய வீரர்கள். மீதம் உள்ள 119 பேர் வெளிநாட்டு வீரர்கள். இதில் 2 வீரர்கள் ஐசிசி உறுப்பு நாடுகளை சேர்ந்தவர்கள்.இறுதிப் பட்டியலில் உள்ள வீரர்களில் 116 பேர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றவர்கள். மீதம் உள்ள 218 பேர் இதுவரை சர்வதேச போட்டியில் அறிமுகமாகாத வீரர்கள் ஆவர். இந்த ஏலத்துக்காக 10 அணிகளும் சுமார் ரூ.262.95 கோடியை செலவழிக்க காத்திருக்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை