UA-201587855-1 Tamil369news “அசாத்தியமான மன உறுதி கொண்ட மனிதர் விஜயகாந்த்” - ரஜினிகாந்த் புகழஞ்சலி

“அசாத்தியமான மன உறுதி கொண்ட மனிதர் விஜயகாந்த்” - ரஜினிகாந்த் புகழஞ்சலி

தூத்துக்குடி: அசாத்தியமான மன உறுதி கொண்ட மனிதர் விஜயகாந்த். ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

'கேப்டன்' என தமிழக மக்களால் அழைக்கப்பட்ட தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் நேற்று (டிச.28) காலை காலமானார். அவரது மறைவு ரசிகர்கள், பொதுமக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் பெரும் திரளாக அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, அமைச்சர்கள், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் காரணமாக விஜயகாந்தின் உடல் இறுதி அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இருந்து தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை