UA-201587855-1 Tamil369news 2-வது டெஸ்டில் இன்று மோதல்: தென் ஆப்பிரிக்காவை சமாளிக்குமா இந்திய அணி?

2-வது டெஸ்டில் இன்று மோதல்: தென் ஆப்பிரிக்காவை சமாளிக்குமா இந்திய அணி?

கேப்டவுன்: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுன் நகரில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இருஅணிகள் இடையிலான 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளும் கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டியில் இன்று கேப்டவுன் நகரில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் மோதுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை