மதுரை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மாநில அளவிலான மகளிர் மற்றும் 14 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான வாலிபால் போட்டி புதன்கிழமை அழகர்கோவில் சுந்தரராசா உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கியது.
இப்போட்டிகளை கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் த.வினோத், தலைமையாசிரியர் வ.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்ட கையுந்து பந்து கழகத்தலைவர் சந்திரசேகர், செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் எஸ்பி பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்